AUT Demands

General Secretary (AUT) | 27 Feb 2025

தோழர்களுக்கு,

வணக்கம். நமது முழக்கப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்களை இன்று  நானும் தோழர் மகாதேவன் அவர்களும்    தலைமைச் செயலகத்தில் சந்தித்து சி ஏ எஸ் தொடர்பாகப் பேசினோம்.

சுமார் 15 நிமிடங்கள் எங்களுடன் உரையாடிய அவர், ‘அது பற்றித்தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் நல்ல முடிவை அறிவிக்கிறேன்’ என்று சொன்னார்கள்.

இறுதியாக, நாட்டு நலப் பணித்திட்ட மாநில விருது எனக்கு வழங்கப்பட்டதை அவருக்கு காட்ட, அவர் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினார் என்பதையும் கூடுதல் தகவலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர்களே,

இன்று (25.02.2025) மாலை நானும் முனைவர் சொ. மகாதேவன் அவர்களும் மாண்புமிகு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலித்து முடிவுகாண அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினருமான திருமதி. கயல்வழி செல்வராஜ் அவர்களை அவரது அரசு இல்லத்தில் சந்தித்தோம்.

நமது சங்கத்தின் சார்பில் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் நேரில் வழங்கினோம்.

சுமார் 15 நிமிடங்கள்   நம்முடன் கலந்துரையாடி நமது தேவைகளை அறிந்து கொண்ட அவர், நமது கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து ஆவன செய்வதாகக் கூறியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

முனைவர். ஆர்.சரவணன்,

பொதுச் செயலாளர்,

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,

தமிழ்நாடு.

Related Posts

Agitation by AUT PSGCAS Unit Members on 3-3-22

|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *