தோழமை வாழ்த்துக்கள்! புத்தாண்டில், அடியெடுத்து வைத்துள்ள, 2022 ஆம் ஆண்டு, நமது பல்கலைக்கழக […]
President | 10 Feb 2022
தோழர்களே அனைவர்க்கும் மாலை வணக்கம் 🙏
நேற்று (9/02/2022) நமது மாநில முதலமைச்சர் அவர்களது இல்லத்தில் நேர்முக உதவியாளரை பார்த்து நமது சங்கத்தின் 75 ஆண்டு மாநில மாநாட்டுக்கு முதலமைச்சரின் தேதி ஒதுக்க மீண்டும் வலியுறுத்தினோம்.
விரைவில் அதற்கான தேதி இடம் உறுதி செய்யப்படும் என்று முதல்வரின் உதவியாளர் மத்திய பொறுப்பாளர்களிடம் உறுதி அளித்துள்ளார்.
உயர்கல்வி துறை அமைச்சர் நகராட்சி தேர்தல் முடிவடைந்தவுடன் மாநாட்டிற்கான தேதி பற்றி முடிவெடுக்க நேரம் ஒதுக்குவதாக கூரினார்.
உயர்கல்வி செயலர் மற்றும் இணைச் செயலர் ஆகியோரை சந்தித்து கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாடு (CAS) வழங்குவது தொடர்பான விளக்கங்களைப் பெற்றோம். அதற்கான கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
AUT யில் அங்கம் பெற்றுள்ள பிரச்சினைகள் உள்ள கல்லூரிகளில் தீர்வுகளை காண செயலர் மற்றும் உயர்கல்வி அமைச்சரிடம் கோரிக்கைகள் அடங்கிய கோப்புகள் (PSG கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, கொங்குநாடு கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், DB Jain கல்லூரி ….) அளிக்கப்பட்டது.
அடுத்த கூட்டத்தில் சங்கங்களுடன் இதுபற்றி பேசி முடிவெடுக்கப்படும் என் கூறினர்.
மாலை தமிழ் மாநில மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களை சந்தித்து பச்சையப்பன் கல்லூரியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளை எடுத்துரைத்தோம்.
இன்று ( 10/02/2022) காலையில்
11 மணியளவில்
கல்லூரி கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்தோம். உயர்கல்வி துறை செயலரிடம் அளித்த கோரிக்கைகளை இயக்குனர் அவர்களிடம் விளக்கி தீர்வுகாண வேண்டுகோள் வைக்கப்பட்டது.
குறிப்பாக தனிபட்ட ஆசிரியர்களின் குறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீர்வு காண வேண்டுகோள் விடுத்தோம்.
குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி ஆசிரியர்கள், கொங்குநாடு கல்லூரி பேரா.ரவிச்சந்திரன் ஆகியோரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு விரைந்து முடிவெடுக்க ஆவண செய்வதாக கூறினார்.
இந்த இரண்டு நாள் சந்திப்பில் மாநில பொதுச் செயலர், பொருளாளர், முன்னாள் தலைவர்கள்
பேரா.N. பசுபதி, பேரா.சாந்தி பொதுச் செயலர் பேரா.சேட்டு மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
வாழ்துகளோடு
பெ.திருநாவுக்கரசு
தலைவர்.
தோழமை வாழ்த்துக்கள்! புத்தாண்டில், அடியெடுத்து வைத்துள்ள, 2022 ஆம் ஆண்டு, நமது பல்கலைக்கழக […]
https://meet.google.com/oqe-pxfw-aqcபேராசிரியர்களுக்கு வணக்கம்..! நான்காம் மண்டல செயற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பும் அழைப்பும். நாள் : […]
மதிப்பிற்குரியீர்பணிவான வணக்கம் கடந்த மாதம் நடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் பிற நிரல்கள் (other […]
Dear comrades GS appeal and details of 75th year jubilee […]