தோழர்களே அனைவர்க்கும் மாலை வணக்கம் 🙏 நேற்று (9/02/2022) நமது மாநில முதலமைச்சர் […]
Dr. R. Saravanan | 01 Feb 2022
தோழமை வாழ்த்துக்கள்!
புத்தாண்டில், அடியெடுத்து வைத்துள்ள, 2022 ஆம் ஆண்டு, நமது பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் (ஏயுடி) 75 ஆண்டுகளின் நிறைவு ஆகும். 1946 ல், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் தாய்க்கழக அமைப்பாக ஏயுடி தொடங்கிய பயணம், தமிழக ஆசிரியர் இயக்கங்களின் வரலாற்றோடு இன்றுவரை தொடர்கிறது.
75 ஆண்டுகளாக தொடர்ந்து உயர்கல்வி நலன், ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு ஆகியவற்றினை உயர்த்திட, சீரிய முறையில் நமது சங்கம் செயலாற்றி வருகின்றது என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியோடு நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன். 75 ஆண்டுகள் கடந்து வந்த வரலாற்று நிகழ்வினை நிலைநாட்டும் வகையில், மாண்புமிகு தமிழக முதல்வர் பங்கேற்கும் பவளவிழா மாநாட்டினை திருச்சியில் நடத்திட பெரு முயற்சிகளை எடுத்து வருவதை மகிழ்வோடு தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
சென்னையில் உள்ள நமது சங்க கட்டிடம் ஓராண்டிற்கு முன்பு பழுதாகி இருந்த நிலையில், அதனை புனரமைத்திட, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முன்னோடிகள்/முன்னாள் பொறுப்பாளர்கள் ரூபாய் 3 லட்சம் முன்பணமாக கொடுத்து உதவி இருகின்றனர் என்பதை கடந்த செயற்குழு கூட்டத்திலேயே தெரிவித்திருந்தேன்.
முன்னோடிகளிடம் கடனாக பெற்ற பணத்தினை இதுவரை, நாம் மீள திருப்பி அளிக்கவில்லை!
தோழர்களே! முன்பணமாக பெற்றுள்ள பணத்தை திருப்பி அளித்திட, ஏற்கனவே நாம் செயற்குழுவில் முடிவு செய்தபடி, உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா ரூபாய் 500/-.
தங்களது கிளையின் 2021-2022 ஆண்டு சந்தாத் தொகை ரூ. 500/-
ஆக, இரண்டையும் சேர்த்து ரூபாய் 1000 (ஆயிரம்) உடனடியாக கீழ்காணும் நமது வங்கிக் கணக்கிற்கு செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், உறுப்பினர்கள் தலா ரூ. 1000/ (ஆயிரம்) பவளவிழா மாநில மாநாடு delegates fees ஆக பெறுவது என்று கடந்த செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்ட படி, கிளை உறுப்பினர்கள் தலா ரூ. 1000/என்று கணக்கிட்டு உடன் அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பணம் அனுப்பிய விபரத்தினை, வாட்ஸ் ஆபு அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவும் எனக்கு(9444189447) தகவலை வருகின்றன பிப்ரவரி 15 க்குள் உடனடியாக அனுப்பி வைக்கவும்.
SB Account No. 000501000045639, Dr. R. SARAVANAN, Dr. R. THIRUNAVUKKARASU, Bank. IOB, Branch. Aminjikarai, Chennai-30, IFSC No. IOBA0000005, MICR No. 600020015.
தங்களின் இனிய
Dr. R. SARAVANAN, Treasurer, 9444189447
தோழர்களே அனைவர்க்கும் மாலை வணக்கம் 🙏 நேற்று (9/02/2022) நமது மாநில முதலமைச்சர் […]
https://meet.google.com/oqe-pxfw-aqcபேராசிரியர்களுக்கு வணக்கம்..! நான்காம் மண்டல செயற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பும் அழைப்பும். நாள் : […]
மதிப்பிற்குரியீர்பணிவான வணக்கம் கடந்த மாதம் நடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் பிற நிரல்கள் (other […]
Dear comrades GS appeal and details of 75th year jubilee […]