AUT Central Executive Committee Meeting held on 28th Jan 2022 at Trichy

General Secretary | 29 Jan 2022

PRESS RELEASE

The AUT Central Executive in its meeting at Trichy today(28.01.2022), recorded its sincere thanks to the Honourable Chief Minister of Tamil Nadu, M.K. Stalin for declaring Chikkaiah Naicker College, Erode as a Government College in tune with the long pending demand of AUT.

​Explaining the resolutions passed at the meeting, Prof. M.S.Bala Murugan, General Secretary, AUT said that the Chikkaiah Naicker College, Erode was under the direct administration of the Regional Joint Director of Collegiate Education, Coimbatore as per the TNPCR Act, 1976, since the College Trust became defunct and the Supreme Court declaring it as a Government Property. The realisation of the above demand will go a long way, fulfilling the aspirations of the people of Erode.

​The Central Executive reminded the newly elected Government’s commitment to dispense with the contributory Pension Scheme with a view to restore the Defined Pension Scheme and urged to expedite the process of its early restoration.

​Dr. P. Thirunavukarasu, President AUT, listed out the deliberate delay in the award of Career Advancement Scheme (CAS) to more than 3,000 teachers in 163 Government Aided Colleges in TamilNadu and urged the Department of Higher Education to immediately pluck out the ‘manufactured’ bottlenecks in its sanctioning. He also pointed out that several Aided Colleges Management refused to process and forward the CAS Proposals of teachers to the office of the RJDCE’s with a view to victimise them. In this context, Dr. P. Thirnavukarasu appealed to the Department of Higher Education to rein in the ‘habitually erring’ Aided College Managements and to streamline the administration at the Offices of the Director and Regional Joint Directors.

​The Central Executive views with serious concern the gradual deterioration of the academic ambience at the six Government Aided Colleges under the Pachaiyappa’s Trust Board (Chennai -3, Kancheepuram- 2, Cuddalore-1) as there has been no responsible administration in tune with the provisions of TNPCR Act, 1976. The Central Executive, in this specific context, demands the immediate conduct of Elections to the Pachaiyappa’s Trust Board, so as to constitute a proper Educational Agency and the College Committee. The termination of L.C. Thirumalai, Dept. of Tamil, Pachaiyappa’s College, Chennai, by the Administrative General and Official Trustee (AG&OT was categorically declared by an order in writing as ‘illegal’ by the RJDCE, Chennai, has not so far been adhered and the subsequent reminders from the Competent Authority were treated with impunity and contempt. Such contrary situation prevailing at the Campuses spoiled the academic atmosphere, resulting in illegal transfers of teachers and refusal to process and forward the CAS proposals of teachers. As a stop-gap arrangement, the AUT Central Executive suggests the interim take over of the administration under a specially appointed officer by the Department of Higher Education.

​The AUT Central Executive takes a strong exception to the continuous apathy and indifference on the systemic and deliberate derailment of Public Funded Higher Education being unleashed by the habitually erring Managements of D.B. Jain College, Thorraippakam, Chennai and PSG College of Arts and Science, Coimbatore which have become notorious in contumaciously refusing to fill up the Teaching and Non-Teaching vacancies with a view to convert these Colleges into Self financing Colleges. It is pertinent to note that as on date, there is not a single teacher at DB Jain College under Aided Stream and 66 Teaching and 42 Non -Teaching vacancies exist at PSG College of Arts and Science, Coimbatore.

​The AUT Central Executive urges the Vice-Chancellor, Bharathiar University, Coimbatore and the Principal Secretary for Higher Education, Govt of Tamil Nadu to shed their indifference towards the plight of 64 teachers appointed in 2016, monetarily suffering without the Career Advancement due to them for want of declaration of Probation.

​The Central Executive demands the Department of Higher Education, Government of Tamil Nadu, a detailed enquiry into the circumstances under which ‘the online MBA Programme’ being conducted by the Bharathidasan University Trichy, through private educational Companies, in blatant violation of the UGC regulations . The AUT urges the Vice-Chancellor, Bharathidasan University, Trichy to immediately halt the online MBA programme under Distant mode and abide by the UGC Regulations.

​The AUT Central Executive urges the Dept. of Higher Education to immediately release the Government Order on taking over the financial burden of payment of ‘salary’ to the temporary Teaching and Non-Teaching Staff of the erstwhile 10 Constituent Colleges of Bharathidasan University, Trichy now converted into Government Colleges.

​The AUT Central Executive urges the UGC to further extend the date of exemption from participation of teachers in Orientation/ Refresher Courses, mandatory for the award of Career Advancement.

​Dr. R. Saravanan, Treasurer proposed the Vote of Thanks.

​​​​​​​​​​M.S. Bala Murugan
​​​​​​​​General Secretary, AUT.

பத்திரிக்கைச் செய்தி

அரசு உதவி பெறும் கல்லூரியான ’ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியினை தமிழக அரசே ஏற்று நடத்தவேண்டும்’ என்ற பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் [ஏயுடி]நீண்ட நாள் கோரிக்கையினை, நிறைவேற்றும் வகையில், மாண்புமிகு தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பினை ஏயுடி வரவேற்று, தனது நன்றியினை முதல்வர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது.

ஏயுடி மாநிலப் பொதுச்செயலர் பேரா.எம்.எஸ்.பாலமுருகன், திருச்சியில் கூடிய மத்தியச் செயற்குழுவின் தீர்மானங்களை விளக்கிக் கூறுகையில், தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம்,1976 மற்றும் அதன் விதிகளின்படி, ’ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின், ‘கல்வி முகமை மற்றும் கல்லூரிக் குழு’ [Educational Agency & College Committee] காலாவதி ஆகிவிட்ட நிலையில், 2000 ஆம் ஆண்டு முதல், கோவை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் அவர்கள், ‘சிறப்பு அதிகாரி’ என்ற நிலையில், இக்கல்லூரியினை நிர்வகித்து வந்தார். கடந்த பல ஆண்டுகளாக, இக்கல்லூரியினை அரசே ஏற்று, அரசுக்கல்லூரியாக மாற்ற வேண்டுமென ஏயுடி கோரிவந்த நிலையில், அதனை ஏற்று, அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ள முதல்வரின் அறிவிப்பு அனைவரும் வரவேற்க கூடியதாகும் என்றார்.

மார்ச், 2003 க்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள் –அரசு ஊழியர்களின், ‘பங்களிப்பு ஓய்வூதீய திட்டம்’ இரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்துவந்த ‘வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ மீண்டும் அமுல்படுத்தப்படும்’ என்ற ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் உறுதிமொழியினை நினைவுகூறிய, பாலமுருகன், திட்ட மாறுதல் பணியினை அரசு விரைவுபடுத்திட வேண்டும் என்ற ஏயுடி யின் மத்தியச் செயற்குழு தீர்மானத்தினை சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் உள்ள 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2006 க்குப் பின்னர் பணியில் சேர்ந்த சுமார் 4,000/ க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், ‘பணிமேம்பாட்டுக் கருத்துருக்களை’, பழிவாங்கும் நோக்கோடு, சில தனியார் கல்லூரி நிர்வாகங்கள் ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளாமலும், அப்படியே பெற்றிருந்தாலும், கருத்துருக்களை, மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களுக்கு மேல் அனுப்பாமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்துவருவதை கண்டிப்பதாக கூறிய, ஏயுடி யின் மாநிலத்தலைவர் முனைவர். பெ.திருநாவுக்கரசு, , அரசின் நிதிநிலையினை காரணம் காட்டி, பணிமேம்பாட்டுக் கருத்துருக்களை பரிசீலிப்பதில் மேலும் காலதாமதப்படுத்திவரும், மண்டலக் கல்லூர்க்கல்வி இணை இயக்குநர், இயக்குநர் மற்றும் உயர்கல்வித்துறையின் அலட்சியப்போக்கினை ஏயுடி கண்டிப்பதாகவும் கூறினார்.

சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழுள்ள 6 அரசு உதவி பெறும் கல்லூரிகளின், ‘கல்விச்சூழல்’ நாள்தோறும் சீரழிந்துவருவதை கவலையோடு சுட்டிக்காட்டிய ஏயுடி மத்தியச் செயற்குழு, தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி’ கல்லூரி முகமை மற்றும் கல்லூரிக்குழு’ அமைக்கப்படாததையும், ,”தமிழ்த்துறை பேராசிரியர் எல்.சி.திருமலை அவர்களை பணி நீக்கம் செய்துள்ள ‘தற்போதைய நிர்வாகத்தின் செயலை’ சட்டத்திற்கு புறம்பானது” என்று எழுத்துபூர்வ ஆணையாக சென்னை மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் தெரிவித்ததோடு, இரண்டு ‘நினைவூட்டல் கடிதங்கள் ’ அனுப்பப்பட்டும், அது இன்றுவரை அமுல்படுத்தப்படாததை சுட்டிக்காட்டிய திருநாவுக்கரசு, சென்னை பச்சையப்பன் அறக்கட்டளைத் தேர்தல்களை உடனடியாக நடத்தி, சட்டத்தின்படி முறையான, ‘கல்லூரி முகமை மற்றும் கல்லூரிக்குழுவினை உருவாக்கிட வேண்டும் என்றும், பழிவாங்கும் நோக்கில் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி மாறுதல்களை திரும்பப் பெற்றிடவேண்டும் என்றும், இடைக்கால ஏற்பாடாக, அறக்கட்டளை நிர்வாகத்தினை ‘சிறப்பு அதிகாரியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும் தமிழக அரசின் உயர்கல்வித்துறையினை வலியுறுத்தினார்.

அரசு உதவி பெறும் கல்லூரிகளான சென்னை துரைப்பாக்கம் டி. பி. ஜெயின் கல்லூரியில், ’இன்றைய தேதியில், அரசு ஊதியம் பெறும் ஆசிரியர் ஒருவர் கூட இல்லையென்றும், உருவான காலிப்பணியிடங்களை நிரப்பாமல், சுயநிதி முறையில் கல்லூரி நடந்து வருவதையும்’, கோவை பூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரியில் உள்ள 66 ஆசிரியர் மற்றும் 42 ஆசிரியரல்லா காலிப்பணியிடங்களை, அரசு நிரப்பிட அறிவுறுத்தியும், கல்லூரி நிர்வாக இதுநாள்வரை நிரப்பிடாமல், சுயநிதிக்கல்லூரியாக மாற்றிடவும், பொதுக்கல்வி முறையினை திட்டமிட்டு தொடர்ந்து சீர்குலைத்திட செயல்பட்டு வருகின்ற இதுபோன்ற தனியார் கல்லூரி நிர்வாங்கள் மீது, எவ்வித குற்ற நடவடிக்கையும் எடுக்காமல், மென்மைப் போக்கோடு அலட்சியபடுத்திவரும் உயர்கல்வித்துறையின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்றும், உயர்கல்வித்துறையின் இத்தகைய ’போக்கு’, ‘கல்விக்கொள்ளையினை கலையாக்கும்’ தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு, ‘தெம்பூட்டும் செயல்’ என்றும், உயர்கல்வித்துறை தனது, ‘அலட்சியத் தூக்கதிலிருந்து விழித்து’ பொதுக்கல்வி முறையினை தமிழகத்தில் பாதுக்காக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும் என்றும் ஏயுடி மத்திய செயற்குழு கோருவதாக பொதுச் செயலர் பாலமுருகன் தெரிவித்தார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், 2016 ல் நியமனம் செய்யப்பட்ட 64 ஆசிரியர்கள், ‘தங்களின் தகுதிகாண் பருவக் காலத்தினை முடித்த பின்னரும், அதனை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திடாத காரணத்தினை சுட்டிக்காட்டி, ஆசிரியர்களுக்குரிய, பணிமேம்பாட்டினை பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துவருவது’ சட்டம் மற்றும் அரசு விதிகளுக்குப் புறம்பானது. ஆசிரியர்களின், ‘தகுதிகாண் பருவ அறிவிப்பினை’ செய்து, பணிமேம்பாட்டினை ஆசிரியர்களுக்கு உடன் வழங்கிட வேண்டுமென, பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரையும், உயர்கல்வித்துறைச் செயலரையும் ஏயுடி மத்தியச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

பல்கலைக்கழகங்களின் தொலைக்கல்வி இணையவழி பாடங்களை முறைபடுத்திடும், யூஜிசி யின் வழிக்காட்டு நெறிமுறைகளுக்கு எதிராக/மாறாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைக்கல்வி ’இணையவழி’ எம்பிஏ பாடங்களை, தனியார் கம்பனி கடந்த பல ஆண்டுகளாக நடத்திவருவது’ குறித்து “விரிவான விசாரணையினை” உயர்கல்வித்துறை நடத்திட வேண்டுமெனவும், அதுவரை, இணையவழி எம்பிஏ பாடங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரை ஏயுடி மத்தியச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 10 மேனாள் உறுப்புக்கல்லூரி [தற்போது அரசுக்கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள] 363 கெளரவ/205 மணி நேர/51 பெற்றோர் – ஆசிரியர் கழக விரிவுரையாளர்கள் மற்றும் 92 அலுவலர்களின், “ஊதிய நிதிச்சுமை” யினை தாங்கமுடியாமல் தத்தளித்துவரும் பல்கலைக்கழக நிர்வாகம், உரியநேரத்தில் ஊதியம் வழங்கமுடியாமல் உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் – அலுவலர்களின் உயர்த்தப்பட்ட ஊதியம், அதன் நிலுவைத்தொகை மற்றும் எதிர்காலத்தில் ஊதியம் வழங்கிடும் முறை ஆகிய பொறுப்புகளை அரசே ஏற்றிடும் “அரசாணையினை” காலதாமதமின்றி வெளியிட வேண்டுமென உயர்கல்வித்துறை மற்றும் நிதித்துறையினை ஏயுடி யின் மத்தியச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ‘பணிமேம்பாடு’ பெற்றிட, புத்தாக்க மற்றும் புத்தொளி பயிற்சி கட்டாயம் என்பது யூஜிசி யின் விதியாகும். தமிழகத்தில் உள்ள 12 அரசு பொதுப்பல்கலைக்கழகங்களில், புத்தாக்க மற்றும் புத்தொளி பயிற்சி வகுப்புகள் நடத்தும் தகுதி பெற்ற நான்கில் மட்டுமே [சென்னை,மதுரை, பாரதியார் & பாரதிதாசன்] யூஜிசி யின் அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் கல்வியல் பயிற்சிக் கல்லூரி உள்ளது. 12 பல்கலைக்கழக/153 அரசு/163 அரசு உதவிபெறும் தனியார் கல்லூரிகளின் சுமார் 2000 பேர், ஆண்டுதோறும் ‘பணிமேம்பாட்டிற்கு’ தகுதி பெறுகின்றனர். ஆனால், அவர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் புத்தாக்க மற்றும் புத்தொளி பயிற்சி பெற வாய்ப்பு, இருக்கும் 4 பயிற்சிக் கல்லூரிகளில் கிடைப்பதில்லை. இதனைக்கருத்தில் கொண்டு, டிசம்பர் 2018 வரை, ’புத்தாக்க மற்றும் புத்தொளி பயிற்சி கட்டாயம்’ என்ற விதியிலிருந்து ’ஆசிரியர்களுக்கு’ விலக்கினை யூஜிசி அளித்துள்ளது. நிலைமையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத தற்போதைய சூழலில், இவ்விலக்கினை மேலும் இன்றுவரை நீட்டித்திட வேண்டுமெனெ ஏயுடி மத்தியச் செயற்குழு யூஜிசி யினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

ஏயுடி யின் மாநிலத் தலைவர் முனைவர் பெ. திருநாவுக்கரசு தலைமை வகித்தார். பொதுச்செயலர் எம்.எஸ். பாலமுருகன், பொருளாளர் சரவணன் மற்றும் ஏழு மண்டல தலைவர்கள்/செயலர்கள் மத்தியச் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.

இப்படிக்கு,

எம்.எஸ். பாலமுருகன்
பொதுச் செயலர்
ஏயுடி தமிழ்நாடு

Related Posts

AUT Office Bearers met officials at Chennai

President |

தோழர்களே அனைவர்க்கும் மாலை வணக்கம் 🙏 நேற்று (9/02/2022) நமது மாநில முதலமைச்சர் […]

Continue reading

Treasurer’s Circular – 31.01.2022

Dr. R. Saravanan |

தோழமை வாழ்த்துக்கள்! புத்தாண்டில், அடியெடுத்து வைத்துள்ள, 2022 ஆம் ஆண்டு, நமது பல்கலைக்கழக […]

Continue reading

Zone IV – Executive Meeting on 02.02.2022

President |

https://meet.google.com/oqe-pxfw-aqcபேராசிரியர்களுக்கு வணக்கம்..! நான்காம் மண்டல செயற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பும் அழைப்பும். நாள் : […]

Continue reading

AUT’s Appeal to Bharathiar University VC to amendment in conformed minutes

President |

மதிப்பிற்குரியீர்பணிவான வணக்கம் கடந்த மாதம் நடந்த ஆட்சிக்குழு கூட்டத்தில் பிற நிரல்கள் (other […]

Continue reading